Trending News [முதலையை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு] 13/07/2019

முதலையை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு..!
Published : Jul 12, 2019 7:13 PM



ஆஸ்திரேலியாவில், ஆலிவ் வகை மலைப்பாம்பு ஒன்று, பெரிய அளவிலான முதலையை கடித்து விழுங்கும் வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள இஸா (isa) மலையில், மார்டின் முல்லர் என்பவர், வனவிலங்குகளை புகைப்படம் எடுத்துகொண்டிருந்தபோது இந்த அரிய வகை காட்சியை பதிவு செய்துள்ளார்.

மேற்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் அதிகளவு காணப்படும் ஆலிவ் வகை மலைப்பாம்பு ஒன்று நீர்நிலையோரம் படுத்திருந்த முதலை ஒன்று, சத்தமின்றி நகர்ந்து வந்து சுற்றுவளைப்பதும், பின் முதலையின் உடலை இறுக்கி அதன் எலும்புகளை நொறுக்கி விட்டு, சகதியோடு அதனை அப்படியே வாய்க்குள் விழுங்கவும் முயற்சிக்கிறது.

இந்த காட்சிகளை தைரியமாக படம் பிடித்த மார்டின் முல்லர், இவ்வகை மலைப்பாம்புகள் 13 அடி நீளம் வரை வளரக்கூடியது என்றும், மனிதர்கள், மான்கள் என எதையும் விழுங்கும் அளவிற்கு அதன் தாடைகள் ரப்பர் போல் நெகிழும் தன்மையயுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

பிரதமர் மோடி சுஜித்துக்காக பிராத்திக்கிறார்🙏... 28/10/2019