பிரதமர் மோடி சுஜித்துக்காக பிராத்திக்கிறார்🙏... 28/10/2019

சுஜித் வில்சனுக்காக பிரார்த்திக்கிறேன் : பிரதமர் மோடி...
Oct 28, 2019


திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்துக்காக, பிரார்த்தனை செய்வதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக, பிரதமர் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில், துணிச்சலும், வீரமும் மிக்க சிறுவன் சுஜித் வில்சனுக்காக பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

சுஜித்தைப் பத்திரமாக மீட்பது தொடர்பாக, மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தாம் விரிவாக பேசியதாக குறிப்பிட்டுள்ளார். சுஜித்தைப் பாதுகாக்க எல்லாவித முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019