முதல் முறையாக சுற்றுலா விசா வழங்கும் சவூதி அரேபியா.. Sep 27, 2019 சவூதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது. தங்கள் நாட்டில் பணிபுரிய வருபவர்கள், அவர்களது குடும்பத்தினர், மெக்கா, மதீனா வரும் ஆன்மீக பயணிகள் ஆகியோருக்கு மட்டுமே சவூதி அரசு விசா வழங்குகிறது. விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்க வருபவர்களுக்கு கடந்த ஆண்டு முதல் சவூதி அரசு விசா வழங்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தற்போது சுற்றுலா விசா வழங்கப்படும் என அறிவித்துள்ளது. கச்சா எண்ணெய் என்பதையும் தாண்டி, பன்முகத்தன்மை கொண்டதாக பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சவூதி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தொலைநோக்குப் பார்வை 2030 திட்டத்தின் கீழ், சுற்றுலாத் தொழிலை வளர்த்தெடுப்பது, சவூதி பட்டத்து இளவரசரின் முக்கிய திட்டமாகும். இந்நிலையில், 49 நாடுகளை சேர்ந்தவர்கள் சவூதிக்கு சுற்றுலா வரும் வகையில் அதற்கான விசா வழங்கப்படும் என சவூதி அரசு அறிவித்துள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று அந்நாட்டு சுற்றுலாத்துறை தலைவர் அஹ்மத் அல்-ஹத்தீப் தெரிவித்துள்ளார். சவூதி அ...
ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க 4 ஆண்டுகள் தடை... Dec 09, 2019 ஊக்க மருந்து சோதனை முறைகேட்டில் சிக்கியதால் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் ரஷ்ய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க 4 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவிலுள்ள ஆய்வகத்தில் வீரர்களுக்கு நடைபெற்ற ஊக்க மருந்து சோதனையில் ரஷ்ய அதிகாரிகள் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தில், ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்க ஒரு மனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி உள்ளிட்டவற்றில் ரஷ்யா கலந்து கொள்ள முடியாது. மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளை ரஷ்யா நடத்தவும் முடியாது. தடை உத்தரவை எதிர்த்து விளையாட்டுப் போட்டிகளுக்கான நீதிமன்ற தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய ரஷ்யாவிற்கு 21 நாட்கள் அவகாசம் உள்ளது.
Comments
Post a Comment