ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019

ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க 4 ஆண்டுகள் தடை...
Dec 09, 2019


ஊக்க மருந்து சோதனை முறைகேட்டில் சிக்கியதால் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் ரஷ்ய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க 4 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோவிலுள்ள ஆய்வகத்தில் வீரர்களுக்கு நடைபெற்ற ஊக்க மருந்து சோதனையில் ரஷ்ய அதிகாரிகள் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தில், ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்க ஒரு மனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி உள்ளிட்டவற்றில் ரஷ்யா கலந்து கொள்ள முடியாது. மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளை ரஷ்யா நடத்தவும் முடியாது. தடை உத்தரவை எதிர்த்து விளையாட்டுப் போட்டிகளுக்கான நீதிமன்ற தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய ரஷ்யாவிற்கு 21 நாட்கள் அவகாசம் உள்ளது.


Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019