சீனாவில் விளக்கொளியால் ஜொலித்த புதிய கண்ணாடிப் பாலம் 01/08/2019

விளக்கொளியால் ஜொலித்த சீனாவின் புதிய கண்ணாடிப் பாலம்
Jul 31, 2019


சீனாவில் சமீபத்தில் கட்டமைக்கப்பட்ட பாலம் விளக்கொளியால் அலங்கரிப்பட்டு ஜொலித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 5-ம் தேதி குவாங்டாங்கில் ஆயிரத்து 843 கோடி ரூபாய் செலவில் கண்ணாடிப் பாலம் திறக்கப்பட்டது.



இரு டென்னிஸ் மட்டைகளை குறுக்கே நிறுத்தியது போல் உள்ள அந்த பாலம் தரைமட்டத்தில் இருந்து ஆயிரத்து 640 அடி உயரம் கொண்டது.

மலை முகட்டில் இருந்து ஆயிரத்து 207 அடி தூரம் நீட்டிக் கொண்டு மலையில் சூரியன் மறையும் காட்சியை ரசிக்க உதவும் கண்ணாடிப் பாலம் வெகு சீக்கிரத்தில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்தது.

அங்கு கடந்த வியாழனன்று 2 ஆயிரம் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவில் ஜொலித்தது. அவ்வப்போது நிறங்கள் மாறி காட்டிய வர்ண ஜாலம் காண்போரை வெகுவாகக் கவர்ந்தது.



இந்தப் பாலத்திற்கு சீன மொழியில் சொர்க்கத்தின் கதவுகள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த வியாழனன்று அந்த கண்ணாடிப் பாலத்தில் ஆடை அலங்கார அணிவகுப்புகளும் நடத்தப்பட்டன.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019