வாடிக்கையாளர்களுக்கு சோமேட்டோவின் பதில் 01/08/2019

உணவுக்கு எந்த மதமும் இல்லை” வாடிக்கையாளருக்கு சோமேட்டோவின் பதில்
Jul 31, 2019



இந்து மதத்தை சேராதவரை உணவு டெலிவரிக்கு அனுப்பியதால் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை ரத்து செய்தவருக்கு சோமேட்டோ நிறுவனம் அளித்த பதில் பலரையும் கவர்ந்துள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த அமித் சுக்லா என்பவர் ஆன்லைனில் உணவு விற்பனை செய்யும் சோமேட்டோவில் உணவை ஆர்டர் செய்துள்ளார். அதனை டெலிவரி செய்ய அனுப்பப்பட உள்ளவர் இந்து அல்லாதவர் என்பதை அறிந்து, வேறு ஒருவரை அனுப்புமாறும் இல்லையென்றால் தனது ஆர்டரை ரத்து செய்துவிடுவதாகவும் சோமேட்டோ கஸ்டமர் கேரில் (care) தெரிவித்துள்ளார்.

அதற்கு, அவ்வாறு டெலிவரி செய்பவரை மாற்ற முடியாது என்றும், ஆர்டரை ரத்து செய்தால் அதற்கான பணம் திருப்பி தரப்படாது என்றும் சோமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிவிட்டரில் அமித் சுக்லா பதிவிட்ட நிலையில், அதற்கு பதில் அளித்துள்ள சோமேட்டோ நிறுவனம், உணவுக்கு எந்த மதமும் இல்லை, உணவே ஒரு மதம் தான் என தெரிவித்துள்ளது. சோமேட்டோ நிறுவனத்தின் பதில் பலரையும் கவர்ந்துள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019