செப்டம்பர்-15 தபால் துறை தேர்வு நடைபெறும் 31/07/2019
தபால் துறை தேர்வு செப்.15ல் நடைபெறும் என அறிவிப்பு
Jul 31, 2019
கடந்த 14ஆம் தேதி நடைபெற்று ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு, செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் துறையில் பதவி உயர்வு பெறுவதற்கான தேர்வு கடந்த 14ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேள்வித் தாள் இருந்தது.
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் கேள்வித் தாள்கள் இல்லாததால் சர்ச்சை எழுந்தது. நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனை எதிரொலித்ததால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்கு நடந்தது.
இந்த வழக்கில் பதில் அளித்த மத்திய அரசானது, மாநில மொழிகளிலும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று உறுதி அளித்தது. இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வானது செப்டம்பர் 15 ஆம் தேதி நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளிலும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் அந்தந்த மாநில மொழிகளிலும் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Comments
Post a Comment