பங்குச்சந்தைகளில் கடும் சரிவு 19/07/2019

இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
Published : Jul 19, 2019 5:17 PM


இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவைச் சந்தித்தன.

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் ஏற்றம் காணப்பட்டபோதிலும், பகல்நேரத்தில் சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் வர்த்தக முடிவில், 560 புள்ளிகளை இழந்து 38ஆயிரத்து 337 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 117 புள்ளிகளை இழந்து 11 ஆயிரத்து 419 புள்ளிகளில் நிலைகொண்டது.

வங்கி மற்றும் நிதி நிறுவன பங்குகளும், ஆட்டோமொபைல் பங்குகளும் சரிவைச் சந்தித்தன. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ஆயிரத்து 405 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்றுத்தள்ளியது சரிவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019