நாசா வெளியிட்டுள்ள செய்தி 19/07/2109

மனிதர்கள் இந்த முறை நிலவுக்குச் சென்று தங்க உள்ளனர் - நாசா
Jul 19, 2019


நிலவுக்கு வீரர்களை அனுப்பி, அங்கு நீண்ட நாட்கள் தங்கச் செய்யும் வகையிலான திட்டத்தை முன்னெடுக்கும் நாசா, அதைக் குறிக்கும் வகையில் மனிதர்கள் இந்த முறை நிலவுக்குச் சென்று தங்க உள்ளனர் என ட்விட்டர் பதிவிட்டுள்ளது.

ஆர்ட்டெமிஸ் என்ற விண்வெளித் திட்டத்தை நாசா முன்னெடுத்து வருகிறது. நிலவுக்கு முதல் பெண்ணை அனுப்புவது மற்றும் நிலவின் தென்துருவத்திற்கு வீரர்களை அனுப்புவது என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவது, அதற்கு நிலவை தளமாகப் பயன்படுத்துவது என்ற விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இது செயல்படுத்தப்படுகிறது.

அரை நூற்றாண்டுக்குப் பிறகு, நிலவுக்கு மனிதர்களை அணுப்பும் திட்டத்தை நாசா செயல்படுத்தும் நிலையில், ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் பணியாற்றும், விண்வெளி ஆடைகளை வடிவமைத்து தயாரிக்கும் விஞ்ஞானி லிண்ட்சே ஐட்சிசன் கேள்வி-பதில் அமர்வு குறித்து ட்விட்டரில் நாசா பதிவிட்டுள்ளது.

அதில், "இந்த முறை நிலவுக்குச் செல்கிறோம், அங்கு தங்குவதற்காக" என்ற குறிப்புடன் பதிவிட்டுள்ளது. நிலவில் வீரர்கள் தங்கி, பணிபுரிய உதவும் விண்வெளி ஆடைப் பொறியாளர் லிண்ட்சே ஐட்சிசன் என்ற குறிப்பும் நாசாவின் ட்விட்டர் பதிவில் இடம்பெற்றுள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019