கங்கை நதியை சுத்தப்படுத்த ரூ. 20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 01/08/2019
கங்கை நதியை சுத்தப்படுத்த கடந்த 5 ஆண்டுகளில் ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
Jul 31, 2019
கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்காக, கடந்த 5 ஆண்டுகளில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய மத்திய நீர்சக்தி துறை இணை அமைச்சர் ரட்டன் லால் கட்டாரியா, கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்கும், புனரமைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.
கங்கையின் சுத்தம் மற்றும் தூய்மையை பேணி காக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 5 ஆண்டுகளில் இந்த திட்டத்திற்காக மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது என்றும் இணை அமைச்சர் ரட்டன் லால் கட்டாரியா தெரிவித்தார்.
பல்வேறு காரணங்களால் அசுத்தமடைந்துள்ள கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக நமாமி கங்கை என்ற பெயரில் புதிய திட்டத்தை, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு 2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment