வா‌னிலை அறிக்கை 20/07/2019

அடுத்த 3 நாட்களில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...
Published : Jul 20, 2019 5:32 PM



தமிழத்தின் கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் எதிரொலியாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்றார்.

இதே போன்று குமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்ற அவர், அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். குமரிக் கடல், மாலத்தீவு, மன்னார் வளைகுடா, தெற்கு வங்க கடலில் சீற்றம் காணப்படுவதால் அங்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர் செல்ல வேண்டாம் என்று புவியரசன் தெரிவித்தார். 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019