கழுகு போன்ற வடிவமைப்பு கொண்ட கற்பனை விமானம் 21/07/2019
கழுகு போன்ற வடிவமைப்பு உடைய கற்பனை விமானம்..!
Published : Jul 21, 2019 4:36 PM
கழுகு போன்ற வடிவமைப்பை உடைய விமானத்தின் கற்பனை உருவ வீடியோவை ஏர்பஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ராயல் இண்டர்நேசனல் ஏர் டாட்டூ என்ற விமானங்கள் கண்காட்சி பிரிட்டனின் ஃபேர்ஃபோர்ட் (fairford) நகரில் நடைபெற்று வருகிறது. இதில், பிரான்சின் விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ், கற்பனையில் உருவான விமானம் குறித்த வீடியோவை வெளியிட்டது. கழுகை மனதில் வைத்து இதை உருவாக்கியதாக ஏர்பஸ் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.
அடுத்த தலைமுறை விமானப் பொறியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாக ஏர் பஸ் தெரிவித்துள்ளது.
வெண்கல வண்ணம் பூசப்பட்ட அந்த கற்பனை விமானம், எரிபொருள் அல்லது மின்சாரத்தின் மூலம் இயங்குவதாக இருக்கும் என்று ஏர்பஸ் கூறியுள்ளது. இதன் மூலம் 30 முதல் 50 சதவீதம் வரை எரிபொருள் மிச்சமாகும் என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.

Comments
Post a Comment