வர்த்தக செய்தி 22/07/2019

சொகுசு கார்கள் மீதான அதிகபட்ச வரிவிதிப்பு குறித்து ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கருத்து..!
Jul 21, 2019


சொகுசு கார்கள் மீதான அதிகபட்ச வரிவிதிப்பு கார் விற்பனை சந்தைகளுக்கும், புதிய மாடல் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கும் தடையாக இருப்பதாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏற்கத்தக்க வகையில் வரிவிதிப்பு இருந்தால், மேலும் பல புதிய மாடல் கார்களை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும் எனவும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரோகித் சூரி தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்யப்படும் 6 மாடல் கார்களை தங்கள் நிறுவனம் விற்பனை செய்து வருவதாகவும், அவற்றை மேலும் அதிகரிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தவும், அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் ஆவலாக இருக்கும் போதிலும், அதிகளவிலான வரிவிதிப்பு அதற்கு தடையாக இருப்பதாகவும் ரோகித் சூரி தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது சொகுசு கார்களுக்கு விதிக்கப்பட்டு வரும் 28 சதவீத ஜிஎஸ்டி வரி, 18 சதவீதமாக குறைக்கப்பட்டால், கார் உற்பத்தி துறை வேகம் பெறுவதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தூண்டுகோலாக அமையும் எனவும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019