பங்குச்சந்தை தொடர்ந்து இறங்குமுகம் 23/07/2019


இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடர்ந்து இறங்குமுகம்
Jul 22, 2019


இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட தொடர் சரிவால், கடந்த 3 வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற அறிவிப்புகள் முதலீட்டாளர்களை கவராததால் சந்தை தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது. சர்வதேச பொருளாதார மந்தநிலை, எதிர்பார்த்த அளவுக்கு நிறுவனங்களின் முதல் காலாண்டு முடிவுகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணிகளால் 3 நாட்களில் 3 சதவீதத்திற்கு மேல் சந்தை இறக்கம் கண்டுள்ளது.

வாரத்தின் முதல் நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 305 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 73 புள்ளிகளும் இறங்கின.

முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று தள்ளியதால் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சிறு, குறு நிறுவனங்கள் மட்டுமின்றி பெரிய நிறுவனங்களின் பங்கு விலைகளும் தாறுமாறாக சரிந்தன.

இதனால் கடந்த 3 வர்த்தக நாட்களில் மட்டும் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 4 லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையின் மதிப்பு 144 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019