மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுஅதிகம் உயர்ந்து உள்ளது 23/07/2019


மேட்டூர் அணைக்கான நீர் வரத்து கிடுகிடு உயர்வு
Jul 23, 2019


கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக அந்த அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், மாண்டியா மாவட்ட கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றும், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 8,300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் இன்று மேட்டூர் அணையை வந்தடைந்தது. இன்று காலைல் நிலவரப்படி வினடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து பிற்பகலுக்குப் பின் 7 ஆயிரம் அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் வரத்தை விட நீர் வெளியேற்றம் வெகு குறைவு என்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019