சாம்சங் செல் புதிய அறிமுகம் 25/07/2019

மடித்து வைக்கும் வகையிலான போன்கள் விற்பனைக்கு தயார் - சாம்சங்
Jul 25, 2019


சாம்சங் நிறுவனத்தின் மடித்து வைக்க கூடிய வகையிலான கேலக்சி ஃபோல்ட் (fold) போன்கள் வரும் செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் உருவாக்கி உள்ள இரண்டாக மடிக்க கூடிய கேலக்சி ஃபோல்ட் போன்கள் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த போன்களில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருப்பதாக விற்பனையை சாம்சங் நிறுவனம் ஒத்திவைத்தது.

அதன் படி தற்போது அந்த போன்கள் மறுவடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் முதல் சந்தையில் கேலக்சி ஃபோல்ட் போன்கள் விற்பனைக்கு வர உள்ளதாகவும் சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் விற்பனை தொடங்கும் தேதியை சாம்சங் நிறுவனம் அறிவிக்கவில்லை.

முன்பே அறிவிக்கப்பட்டது போல அந்த போன்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது.போனின் ஸ்கிரீனில் தூசி நுழைந்துவிடாதபடியும், மடிப்புகளில் தூசி தங்காத வகையிலும் வடிவமைப்பை மாற்றவே விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019