உள்தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது 30/07/2019
உள்தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
Jul 30, 2019
உள் தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல் ,பெரம்பலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுவிழந்து விட்டதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே தென் மேற்கு பருவமழையானது வழக்கத்தைக் காட்டிலும் தமிழகத்தில் 27 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. 13 செண்டி மீட்டர் பெய்ய வேண்டிய மழை, தற்போது வரை 9 சென்டி மீட்டர் மட்டுமே பெய்துள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Comments
Post a Comment