பள்ளிகளில் நூலகம் அமைக்க வேண்டும் 30/07/2019
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் நூலகம் அமைக்க வேண்டும்
Jul 29, 2019
நூலகம் இல்லாத அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் கூடுதலாக உள்ள வகுப்பறையில் புதிய நூலகம் அமைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏற்கனவே பெரும்பாலான பள்ளிகளில் நூலகங்கள் உள்ளதாகவும், நூலகம் இல்லாத மற்ற பள்ளிகளில் நூலகங்களை உருவாக்க வேண்டும் என்றும், அதற்கான வழிகாட்டு நெரிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் குறைந்தபட்சம் ஆயிரம் புத்தகங்கள் உள்ள வகையில், நூலகம் செயல்பட வேண்டும், இந்த நூலகங்களில் தமிழ் மற்றும் ஆங்கில செய்திதாள்களை மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், இதற்கென தனியாக ஒரு ஆசிரியரை நியமித்து மாணவர்களின் பேச்சுத்திறன், எழுத்துத்திறன், வாசிப்பு திறனை ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு நூலகத்தில் உள்ள நூல்களை படிக்க குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றும், இந்த பணிகளை முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பார்வையிட வேண்டும் எனவும் பள்ளிகல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment