தபால் துறை தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் எழுதுவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது 30/07/2019
தபால் துறை தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் எழுதுவதற்கான அறிவிப்பாணை - உயர்நீதிமன்றத்தில் தாக்கல்
Jul 30, 2019
அஞ்சல் துறை தேர்வை தமிழில் எழுதலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணை நகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
அஞ்சல்துறை பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு ஆங்கிலம் அல்லது அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்படும் என கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் அஞ்சல் துறை தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதற்கு எதிராக தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது அஞ்சல் துறை தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்கும் மே 10ம் தேதி அறிவிப்பே தொடரும் என கடந்த 23-ஆம் தேதி மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை புதிய அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாகக் கூறி அதன் நகலை மத்திய அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். இதனால் அஞ்சல்துறை தேர்வுகளை பழைய முறைப்படி தமிழிலும் எழுதலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

Comments
Post a Comment