புதிய மத்திய நிதித்துறை செயலாளர் 31/07/2019

மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ்குமார் நியமனம்
Jul 31, 2019



மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்பொறுப்பில் இருந்த சுபாஷ் சந்திர கார்க் அண்மையில் எரிசக்தித்துறை செயலாளராக மாற்றப்பட்டார். அவர் விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், காலியாக உள்ள நிதித்துறை செயலாளர் பதவிக்கு ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

1984-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜீவ் குமார் தற்போது நிதிச்சேவைகள் செயலாளராக பணியாற்றி வருகிறார். பொதுத்துறை வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட வங்கி சீர்திருத்தப் பணிகளில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019