நள்ளிரவிலும் நீடித்த கலந்தாய்வு 31/07/2019

நள்ளிரவிலும் நீடித்த கலந்தாய்வு
Jul 31, 2019


பொறியியல் துணைக் கலந்தாய்வு இறுதி நாளான நேற்று ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டதால், நள்ளிரவையும் தாண்டி கலந்தாய்வு நீடித்தது.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 27ம் தேதி வரை ஆன்லைனில் நடைபெற்றது. இதில் மீதமிருந்த 87 ஆயிரம் காலியிடங்களுக்கு 6 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு கடந்த 3 நாட்களாக துணைக் கலந்தாய்வு நடைபெற்று வந்தது. இறுதி நாளான நேற்று அதிக மாணவர்கள் பங்கேற்றதால் இரவிலும் கலந்தாய்வு நீடித்தது.

வெளிமாவட்டங்களில் இருந்து வந்த மாணவ-மாணவிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்று புகார் தெரிவித்தனர்.

முறையான அழைப்புகளும், தரவரிசை எண்ணும் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டிய மாணவர்கள், இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் வந்திருப்பதாகத் தெரிவித்தனர்

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019