அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக் கட்டணத்தை ரத்து செய்யப்பட்டுள்ளது 31/07/2019
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக் கட்டணத்தை ரத்து செய்து அரசாணை வெளியீடு
Jul 31, 2019
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை ரத்து செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி நடைமுறையில் உள்ளது. இந்த வகுப்புகளுக்கு இதுவரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்தக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்நிலையில் அதுதொடர்பான அரசாணை பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கில வழிக் கல்விக்கு கட்டணத்தை ரத்து செய்வது அதில் மாணவர்கள் தொடர்ந்து படிப்பதற்கு வழி ஏற்படுத்தும் என்றும் அதன் மூலம் தேசிய அளவில் ஆங்கில மொழியில் நடத்தப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகளை அவர்கள் சுலபமாக எதிர்கொள்ள முடியும் என்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அரசுக்கு பரிந்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை ஏற்று 2019-2020-ம் கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்வியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 22,314 மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கல்விக்கட்டணம் 67 லட்சம் ரூபாயை திரும்ப ஒப்படைக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதைப் பின்பற்றி நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து வகுப்பினருக்கும் ஆங்கில வழி கல்விக்கட்டணத்தை முழுமையாக ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments
Post a Comment