காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு அளவைக் குறைக்க கண்டுபிடிக்கப்பட்ட மின்சார விமானம் 31/07/2019


காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு அளவைக் குறைக்கும் வகையில் மின்சார விமானம்
Jul 31, 2019


அமெரிக்காவில் மின்சாரத்தினால் இயங்கும் சிறிய விமானங்களை வரும் நாட்களில் சோதிக்க ஆம்பையர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

லாஸ் ஏஞ்சலிஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட ஆம்பையர் நிறுவனம் முழுவதும் மின்சாரத்தினால் இயங்கும் இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட செஸ்னா 337 ரக விமானங்களைத் தயாரித்துள்ளது.

உலகின் முதல் மின்சார விமானம் என்று பெயர் பெற்றுள்ள செஸ்னா விமானத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் பறக்கவிட்டு சோதனை நடத்த ஆம்பையர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கார்பன் டை ஆக்ஸைடு வாயுவைக் குறைக்கும் வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஆம்பையர், 2021ம் ஆண்டு இந்த ரக விமானங்களை பறக்கவிட அனுமதி கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019