பனிப்பாறை உருகும் அபாயம் 31/07/2019
வெப்ப அலைகள் காரணமாக பனிபாறைகள் உருகும் அபாயம்
Jul 31, 2019
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் காரணமாக கிரீன்லாந்தில் பனிப்பாறைகள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் அண்மைக்காலமாக நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்வதேச வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், தொடர்ந்து வீசும் வெப்ப அலைகள் காரணமாக கிரீன்லாந்து பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 1950ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் கிரீன்லாந்து பகுதியில் அதிக வெப்பம் உணரப்படுவதாக பருவநிலை ஆய்வாளர் மார்ட்டின் ஸ்டென்டல் தெரிவித்துள்ளார்.
இதனால் கடல் நீர் மட்டம் அரை மில்லி மீட்டர் உயர்ந்துள்ளதாகவும், இது புதிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment