5 டாலர்களைக் கொடுக்கும் கூகுள் நிறுவனம் 30/07/2019

தெருவில் செல்பவர்களுக்கெல்லாம் 5 டாலர்களைக் கொடுக்கும் கூகுள்
Jul 30, 2019


தெருவில் செல்பவர்களுக்கெல்லாம் 5 டாலர்களைக் கொடுத்து பிக்ஸல் 4 ஸ்மார்ட்போனை முக அடையாளத்தைப் பயன்படுத்தி திறக்கும் தொழில்நுட்பத்துக்கான கள ஆய்வுக்கு கூகுள் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

முக அடையாளத்தைப் பயன்படுத்தி ஸ்மார்ட் போன் லாக்கை திறக்கும் தொழில்நுட்பம் ஏற்கெனவே அமலில் இருந்தாலும் அதில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. அக்டோபரில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் பிக்ஸல் 4 மற்றும் பிக்ஸல் 4 எக்ஸ் எல் ஸ்மார்ட்போன்களில் அந்தக் குறைகளைக் களைய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதற்காக கூகுள் பணியாளர்கள் அமெரிக்காவில் தெருக்களில் செல்வோரிடம் சென்று இந்திய மதிப்பில் 340 ரூபாய் மதிப்புள்ள 5 டாலருக்கான சான்றை வழங்கி அவர்களின் முக அடையாளங்களைப் பயன்படுத்தி சோதனை செய்து வருகிறது. ஒரே நிறத்தில் உள்ளவர், வடிவமைப்பை ஒத்த உருவங்கள், இன்ஃப்ராரெட், முகத்தோற்றத்தின் ஆழத்தை நேரத்துடன் பதிவிடுவது, படம் எடுக்கும் சூழல், வெளிச்சம் என பல பிரிவுகளிலும் ஆய்வு மேற்கொள்கிறது.  

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019