5G தொழில்நுட்பத்தை மேம்படுத்தி காப்புரிமை பெற நடவடிக்கை 29/07/2019
5ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்தி காப்புரிமை பெற நடவடிக்கை
Jul 28, 2019
5 ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, அதற்கான காப்புரிமையை இந்தியா பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய தகவல் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
5 ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. இந்தியாவும் 5ஜி தொழில்நுட்பத்தைமேம்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பொதுமக்களுக்கு 5ஜி சேவை வழங்குவது மட்டுமே மத்திய அரசின் குறிக்கோள் அல்ல என்றும், 5ஜி தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதற்கான காப்புரிமையை பெற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வீடுகளில் உள்ள மின்சாதனங்களை எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கும் வகையிலான இண்டர்நெட் ஆப் திங்ஸ் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகியவை மேம்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
அக்டோபரில் மத்திய தகவல் தொலைதொடர்பு துறை சார்பில், இந்தியாவில் நடைபெறவுள்ள தொழில்நுட்ப மாநாட்டில், 40 நாடுகளை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கேற்கவுள்ளதாகவும், இது டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இருக்கும் எனவும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
Comments
Post a Comment