வினாடிக்கு 7 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வரத்து 26/07/2019
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரத்து 200 கனஅடி வீதம் தண்ணீர் வரத்து
Jul 26, 2019
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 7 ஆயிரத்து 200 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 7 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரைவிட, அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 41.15 அடியாக இருந்த நீர் மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்து 42.15 அடியாக அதிகரித்தது. இனி வரும் நாட்களில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும். அப்போது நீர் மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது.
மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள அடிபாலாறு, பண்ணவாடி பகுதிகளில் காவிரி ஆற்றில் நுரையுடன் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர் வரத்து அதிகரித்ததால் செட்டிபட்டி, கோட்டையூர், பன்ணவாடி பரிசல் துறைகளில் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீனவர்கள் தங்கள் முகாம்களை மேடான பகுதிக்கு மாற்றினர்.

Comments
Post a Comment