கூகுள் CEO பதவிக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம்...,! 01/08/2019

கூகுள் CEO சுந்தர் பிச்சை வகிக்கும் பதவிக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம்..!
Jul 31, 2019


பிரபல வேலைவாய்ப்பு இணையதளத்தில் கூகுள் சிஇஓ பதவி காலியாக இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டதால் பலர் அதற்கு விண்ணப்பித்தனர்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான Linkedin இணையதளத்தில் சிறு நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில், இந்த இணையதளத்தில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவி காலியாக இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது அந்த பதவியில் சுந்தர் பிச்சை வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில் பலர் அந்த விளம்பரத்தை பார்த்து குழம்பம் அடைந்தனர். இருப்பினும் ஆயிரக்கணக்னோர் அந்த பணிக்காக விண்ணப்பித்துள்ளனர்.

இதனையடுத்து அது பொய்யான விளம்பரம் என்றும் நெதர்லாந்தை சேர்ந்த மைக்கெல் ரிஜின்டர்ஸ் ((Michel Rijnders)) என்பவர் அதனை பதிவிட்டதாகவும் Linkedin இணையதளம் தெரிவித்ததோடு, அந்த விளம்பரத்தையும் நீக்கி உள்ளது.

Linkedin இணையதளத்தில் பொய்யாக பலர் வேலைவாய்ப்பு குறித்து விளம்பரம் செய்வதை நிரூபிக்க தான் அவ்வாறு பதிவிட்டதாக மைக்கெல் ரிஜின்டர்ஸ் தெரிவித்துள்ளார்

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019