Flipcart in New Furniture shop 29/07/2019
ஃபிலிப்கார்டின் முதல் ஆஃப்லைன் ஃபர்னிச்சர் மையம்
Jul 29, 2019
ஃபிலிப்கார்ட் நிறுவனம் பெங்களூருவில் ஆஃப்லைன் மையத்தை திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஃபிலிப்கார்டின் ஃபர்னிச்சர் பிரிவில் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு ஃபர்னிசுயூர் (FurniSure) எனும் மையம் பெங்களுரூவில் திறக்கப்படவுள்ளது.
ஆயிரத்து 800 சதுர அடிப் பரப்பளவில், ஃபிலிப்கார்ட் நிறுவனம் தொட்டுணர்ந்து பார்த்துத் தேர்ந்தெடுக்கும் வகையில் அறைகலன்களைக் காட்சிப்படுத்தவுள்ளது.
மேலும், அந்த குறிப்பிட்ட அறைகலனை கூகுள் லென்ஸ் மூலம் புகைப்படம் எடுப்பதன் மூலம் அதை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
அறைகலன்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அதை நேரில் பார்த்து வாங்க விரும்பும் சூழலில், வாடிக்கையாளர்களை மையப்படுத்தி இயங்கும் தங்கள் நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக ஃபிலிப்கார்ட் நிறுவனம் கூறியுள்ளது.

Comments
Post a Comment