SBI வங்கி டெபாசிட் தொகை வட்டி விகிதம் குறைப்பு 29/07/2019

எஸ்பிஐ வங்கி டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் குறைப்பு
Jul 29, 2019


நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கி, டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்திருப்பதாக அறிவித்துள்ளது.

179 நாட்களுக்கு உட்பட்ட குறுகிய கால டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.5 சதவீதத்தல் இருந்து 0.75 சதவீதம் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று நீண்ட கால டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.2 சதவீதம் முதல் 0.35 சதவீதம் வரை குறைக்ப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 கோடிக்கு மேற்பட்ட மொத்த டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் இந்த வட்டி குறைப்பு அமலுக்கு வரும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

பணப்புழக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் ஏற்கனவே எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி போன்றவை டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன. நடப்பு ஆண்டில் மட்டும் வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019