Sports News [இந்திய ராணுவத்தில் பயிற்சிக்கு செல்லும் தோனி] 22/07/2019
இந்திய ராணுவத்தில் பயிற்சிபெற செல்லும் தோனி
Jul 22, 2019
இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற தோனிக்கு ராணுவ தளபதி பிபின் ராவத் அனுமதி வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவியில் இருந்துவரும் தோனி, அவ்வப்போது ராணுவ வீரர்களுடன் உரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் ராணுவ குழுவுடன் பயிற்சி மேற்கொள்ள அவர் அனுமதி கேட்டதாகவும் அதற்கு ராணுவத் தளபதி அனுமதி வழங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவ வீரர்களுடன் ஜம்மு காஷ்மீரின் ஒருபகுதியில் அவர் பயிற்சி பெறலாம் என்றும், அதே நேரத்தில் ராணுவ நடவடிக்கையில் பங்குபெற அவருக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் ராணுவ தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment