Today Gold & Silver rating 19/07/2019
தங்கம் விலை மீண்டும் உயர்வு
Jul 19, 2019
கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து 27 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது.
ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று ஒரே நாளில் 248 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 26 ஆயிரத்து 904 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் 31 ரூபாய் அதிகரித்து மூவாயிரத்து 363 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 44 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 44 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Comments
Post a Comment