World News 22/07/2019
கார்ட்டூன் கதாபாத்திரங்களின் கண்கவர் அணிவகுப்பு
Jul 21, 2019
கலிபோர்னியாவின் சான் டியாகோ நகரில் நடந்த கார்ட்டூன் கற்பனை கதாபாத்திரங்களின் கண்கவர் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
சான் டியாகோ நகரில் ஆண்டுதோறும், கார்டூன் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் இடம்பெறும் கற்பனை கதாபாத்திரங்கள் அங்குள்ள கன்வென்ஷன் மையத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் ஹாலிவுட் கற்பனை கதாபாத்திரங்கள் மற்றும் புனைகதைகளில் உள்ள கதாபாத்திரங்கள் போல் வேடமிட்டு அணிவகுத்து நின்றனர். இதனை காண குழந்தைகளுடன் வந்த ஏராளமான பொதுமக்கள், கதாபாத்திரங்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அமெரிக்காவில் அடுத்தாண்டு அதிபர் தேர்தலும் நடைபெறவுள்ளதால், அரசியல் தலைவர்கள் போல் வேடமிட்ட பலரும் அணிவகுப்பில் கலந்து கொண்டு, அவர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

Comments
Post a Comment