வங்கிகளில் இருந்து ஓர் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுத்திருந்தால் 2% வருமான வரி 31/08/2019
ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் வருமான வரி பிடித்தம்
Aug 31, 2019
வங்கிகளில் இருந்து ஓர் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் எடுத்திருந்தால்,ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் 2 சதவீதம் Tds செலுத்த நேரிடும். திங்கட்கிழமை முதல் இம்முறை அமலுக்கு வருகிறது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில் சமூக ஊடகங்களில் மக்களிடம் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை கணக்கில் 2020-21ம் ஆண்டில் இருந்துதான் இது கணக்கிடப்படும் என்றாலும் இந்த ஆண்டின் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31 வரை ஒருவர் வங்கிகளில் இருந்து ஒருகோடி ரூபாய்க்கு மேல் பணம் ரொக்கமாக எடுத்திருந்தால் அவரிடமிருந்து செப்டம்பர் முதல் தேதியில் இருந்து ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் 2 சதவீதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே வங்கி கணக்கில் அல்லது பல்வேறு கணக்குகளில் இருந்தும் தபால் நிலைய கணக்கில் இருந்தும் எடுத்த பணம் மொத்தமாக கணக்கிடப்பட்டு ஒரு கோடிக்கும், அதற்குமேலும் அதிகமாக இருந்தால், அதன் பின்னர் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போது 2 சதவீத வரிக்கு ஆளாகும் என்று அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

✌
ReplyDelete