சந்திரயான்-2 தரை இறங்குவதை பிரதமர் மோடியுடன் பார்க்க உத்திரப்பிரதேச மாணவி தேர்வு 31/08/2019

சந்திரயான்-2 விண்கலம் தரை இறங்குவதை பிரதமர் மோடியுடன் பார்க்க முதல் ஆளாக உத்தரபிரதேச மாணவி தேர்வு
Aug 31, 2019


நிலவில் விக்ரம் விண்கலம் தரை இறங்குவதை பிரதமர் மோடியுடன் அமர்ந்து சேர்ந்து பார்க்க முதல் ஆளாக லக்னோ மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலை 22-ந்தேதி இஸ்ரோ விண்ணில் ஏவியது.வருகிற 7-ந்தேதி நிலவின் தென்துருவத்தில் விக்ரம் விண்கலம் தரை இறங்குகிறது. நிலவில் விக்ரம் விண்கலம் தரை இறங்குவதை பிரதமர் மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் இருந்து நேரடியாக பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே மோடியுடன் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை மாணவ- மாணவிகள் பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைனில் குவிஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டன.

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 2 மாணவர்கள் தேர்வு செய்யும் வகையில் நடைபெற்ற போட்டியில் , லக்னோவைச் சேர்ந்த ரஷிவர்மா என்ற மாணவி வெற்றி பெற்றார்.

இவர் லக்னோவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் முதல் ஆளாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மற்ற மாநிலங்களில் இருந்து தேர்வான மாணவ- மாணவிகளின் விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019