மத்தியில் பிரதமர் மோடி உணர்ச்சிகரமான உரை 25/08/2019

இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் மோடி உணர்ச்சிகரமான உரை
Aug 25, 2019


பஹ்ரைனில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் பலமடங்கு வளர்ச்சியை கண்டுவிடும் என்று தெரிவித்தார்.

5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நிர்ணயித்து தமது அரசு செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.செப்டம்பர் 7ம் தேதி இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் செலுத்திய சந்திரயான் 2 நிலவில் கால்பதிக்க உள்ளதாக மோடி பெருமையுடன் தெரிவித்தார். உலகம் முழுவதுமே இந்தியாவின் விண்வெளித்திட்டங்கள் குறித்து பேசப்படுகிறது என்றும் தெரிவித்த பிரதமர் மோடி, இத்தனை சிறிய பட்ஜெட்டில் இத்தனை பெரிய சாதனையை எப்படி நிகழ்த்த முடிகிறது என்று உலகமே வியப்புடன் பார்ப்பதாக கூறினார் .

இது முழுக்க முழுக்க இந்தியர்களின் திறமையாலேயே சாத்தியமாகியிருப்பதாகவும் மோடி கூறினார்.அருண் ஜேட்லீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மோடி தனது மிக நெருங்கிய நண்பர் ஒருவரை இழந்துவிட்டதாகவும் இதனால் மிகுந்த வலியும் வேதனையும் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு தமது சகோதரியைப் போன்ற சுஷ்மாவை இழந்துவிட்டதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.தொடர்ந்து பஹ்ரைன் மன்னர் சல்மான் பின் இசா காலிபாவுடன் மனாமாவில் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்தியா-பஹ்ரைன் இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.


Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019