காவலர் பணியிடங்களுக்கான தேர்வு... 25/08/2019
தமிழகம் முழுவதும் 228 மையங்களில் காவலர் பணியிடங்களுக்கான தேர்வு.....
Aug 25, 2019
8 ஆயிரத்து 888 காவலர் பணியிடங்களுக்காக நடைபெற்ற தேர்வை தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
ஆயுதப்படைக்கு 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கு 5,962 இரண்டாம் நிலைக் காவலர்கள், 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்பு வீரர் பணியிடங்கள் உள்ளிட்ட 8 ஆயிரத்து 888 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
10-ம் வகுப்பு தேர்ச்சி, கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் உட்பட 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 228 மைங்களில் காலை 10 முதல் 11.20 மணிவரை நடைபெற்றது.சென்னை
சென்னை
சென்னையில் காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், பச்சையப்பன் கல்லூரி, மீனாட்சி பெண்கள் கல்லூரி உள்ளிட்ட 13 மையங்களில் 2 ஆயிரத்து 429 பெண்கள் உள்ளிட்ட 19,990 பேர் தேர்வு எழுதினர். கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி மையத்தில் 2000 பெண்கள் தேர்வு எழுதினர். தேர்வை முன்னிட்டு சென்னையில் காவல் ஆணையர் தலைமையிலும், பிற மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டிருந்தது. எழுத்து தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெறவேண்டும். தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும். தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்தகட்டமாக உடல்தகுதி தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றிபெற்றவர்கள் பட்டியல் அடுத்த ஒரு மாதத்தில் வெளியிடப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
சேலம்
சேலத்தில் ஜெயராம் கல்லூரி, சக்திகைலாஷ் கல்லூரி, செந்தில் பப்ளிக் ஸ்கூல் ஆகிய மையங்களில் காவலர் எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக காலை 8 மணிக்கு வந்து நீண்ட கியூவில் நின்று இருந்தனர். அனைவரையும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதித்தனர். செல்போன் மற்றும் பர்ஸ், கால்குலேட்டர் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டதால், காவல்துறையினர் வாங்கி வைத்துக் கொண்டனர். தேர்வை மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானிகேர் ஆகியோர் பார்வையிட்டனர்.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் 17 மையங்களில் 21,896 பேர் தேர்வு எழுதினர். பெண்களுக்காக 4 சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில், 7 ஆயிரத்து 145 பேர் தேர்வு எழுதினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் 28 மையங்களில் 25 ஆயிரத்து 185 பேர் தேர்வு எழுதினர். காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி தேர்வு மையத்தை, காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் நேரில் பார்வையிட்டார். மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் தேர்வு மையங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி, கடலூர், காரைக்குடி, கல்குளம், திருச்செங்கோடு உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காவலர் தேர்வு நடைபெற்றது.
தேர்வு மையங்களுக்குள் செல்ஃபோன் உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதியில்லை என்ற நிலையில், அனுமதியற்ற பொருட்கள் தேர்வு எழுத வந்தவர்களிடம் இருந்து பெறப்பட்டு காவல் வாகனங்களில் வைக்கப்பட்டன.
சென்னையில் தேர்வு மையங்களுக்கு சென்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார். இந்நிலையில் சென்னை அண்ண பல்கலைக்கழக தேர்வு மையத்தில் ஒரு தேர்வருக்கான இடம் காலியாக இருந்ததையடுத்து அது குறித்து காவல் ஆணையர் கேள்வி எழுப்பினார்.
அப்போது டெல்லியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனக்கு தமிழ் தெரியாது எனக் கூறி ஆங்கிலத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் அவருக்கு வினாத்தாள் தமிழில் வழங்கப்பட்டதால் தேர்வு எழுத முடியாமல் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
Comments
Post a Comment