தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு.... 25/08/2019
தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு-இந்திய வானிலை ஆய்வு மையம்
Aug 25, 2019
இந்திய வானிலை மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், தமிழகம், கேரளா, கடலோர கர்நாடகப் பகுதிகள், இமாச்சல், உத்ரகண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவக் காற்றின் சாதக போக்கின் காரணமாக நீலகிரி மற்றும் கோவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்கச்செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.
கடந்த 24 மணிநேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 3 சென்டி மீட்டர், வால்பாறை, நீலகிரி மாவட்டம் தேவாலா,காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம், காஞ்சிபுரம் சத்யபாமா பல்கலைக்கழகம், காஞ்சிபுரம், தரமணி, மகாபலிபுரம், சென்னை விமான நிலையம், சிவகங்கை, தேவக்கோட்டை, திருப்பூர் மாவட்டம் அவினாசி ஆகிய இடங்களில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மேலும் இந்திய வானிலை மைய அறிவிப்பில், மேற்கு மத்திய பிரதேசம் மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்மேற்கு அரபிக் கடல், தென்கிழக்கு மற்றும் மத்திய வங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், ஒடிசா-ஆந்திர கடலோர பகுதிகளில் சூறைக் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த பகுதிகளில் அடுத்த சில நாட்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment