ஹார்லி டேவிட்சன்-ன் புதிய மாடல் டூவீலர் இந்தியாவில் அறிமுகம் 27/08/2019

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மின்சார டூவீலர் ‘லைவ் வயர்‘ மாடல் இந்தியாவில் அறிமுகம்
Aug 27, 2019

  

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது முதல் மின்சார இருசக்கர வாகனமாக ‘லைவ் வயர்‘ மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற சொகுசு அம்சங்கள் கொண்ட இருசக்கர வாகன தயாரிப்பில் அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனம் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் சொகுசு ரக இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனம், மின்சார மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்கும் லைவ் வயர் என்ற இருசக்கர வாகனங்களை தயாரித்து, ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தனது கிளை நிறுவனங்கள் அமைந்துள்ள கனடா, ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்து வருகிறது.

இந்தநிலையில், இந்த வாகனம் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிளட்ச், கியர் இல்லாத இந்த வாகனத்தை எளிய முறையில் இயக்கலாம் எனவும், அதிவேகம் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மோட்டார்சைக்கிள் இயக்கப்பட்ட முதல் 3 விநாடிகளில் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட முடியும் எனவும், இதே வேகம் தொடர்ந்தால், அடுத்த 2 நொடிகளுக்குள்ளாக சுமார் 129கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறனுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மின்சார இருசக்கர வாகனம் இந்தியாவில் விற்பனைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விற்பனைக்கு வரும் பட்சத்தில் வாகனத்தின் விலை 40 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.


Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019