நடிகர் சங்க வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி 28/08/2019
நடிகர் சங்க கட்டிடம் தொடர்பான வழக்கு தள்ளுபடி
Aug 28, 2019
பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகர், அபிபுல்லா சாலை மற்றும் பிரகாசம் தெருவை இணைக்கும் 33 அடி அகல சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கத்திற்கு 26 கோடி ரூபாய் செலவில் கட்டிடம் கட்டுவதால் கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரி தி.நகர் வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, அதுவரை கட்டிடப்பணிகளை மேற்கொள்ள இடைக் கால தடைவிதித்து இருந்தது. பின்னர் வழக்கறிஞர் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து, கட்டிடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது.
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது, நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதில் ஆட்சேபனை இல்லை எனவும், பொதுமக்கள் பயன்படுத்தும் 33 அடி அகல சாலையையும் சங்க கட்டிடத்தோடு சேர்த்து ஆக்கிரமித்துள்ளதால், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் அந்த சாலையை மீட்க உத்தரவிட வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதில் தீர்ப்பளித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Comments
Post a Comment