புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் 28/08/2019
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மறுப்பவர்கள் மீது நடவடிக்கை தேவை - அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்
Aug 28, 2019
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கழைக்கழக வளாகத்தில் பொறியியல் படிப்பு சார்ந்த புத்தக கண்காட்சியை பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய கல்விக்கொள்கையை யாரும் எதிர்க்ககூடாது என்றார்.
புதிய கல்விக்கொள்கையில் பல நல்ல விஷயங்கள் அமைந்திருப்பதாகக் கூறிய அவர், அதனை நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மறுப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுரப்பா வலியுறுத்தினார்.
புதிய கல்விக்கொள்கையை முழுமையாக அமல்படுத்தாவிட்டால் அதன் நோக்கம் வீணாகிவிடும் என்றும் சுரப்பா தெரிவித்தார்.
Comments
Post a Comment