சிங்கிள்களுக்கான காதல் ரயில்...! 29/08/2019

சிங்கிள்களுக்கான காதல் ரயிலை இயக்கிய சீனா..!
Aug 29, 2019



சிங்கிள்களுக்கான காதல் ரயிலை சீனா கடந்த வாரம் இயக்கியது.



சீனாவில் 70-களில் விதிக்கப்பட்ட ஒரே குழந்தைத் திட்டத்தால், பெரும்பாலான பெற்றோர், அதை ஆண்குழந்தையாக பெற்றுக் கொள்ள விரும்பி, பெண் சிசுக்களை கருவிலேயே அழித்தனர்.

அதன் விளைவாக அடுத்த 30 ஆண்டுகளில் 3 கோடி சீன ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு கணிப்பின் படி, சராசரியாக ஆயிரம் இளைஞர்களில் சுமார் 7 பேருக்குத்தான் திருமணமானது.

இது நாட்டின் வளர்ச்சியையும், மனித வளத்தையும் பாதிக்கும் என்பதை உணர்ந்த சீனா 2016-ல் ஒரே குழந்தை என்ற திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. திருமணமாகாத சிங்கிள்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் பொருட்டு கடந்த 3 ஆண்டுகளாக காதல் ரயில் ஒன்றை இயக்கி வருகிறது.

10 பெட்டிகள் கொண்ட இந்த காதல் ரயிலில் திருமணமாகாத ஆண், பெண் என ஆயிரம் சிங்கிள்கள் பயணிப்பர். 2 பகல் ஒரு இரவு பயணிக்கும் இந்த ரயில், அவர்களை பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்கான சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்கிறது.

உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை ரயிலிலேயே வழங்குகிறது. அவர்கள், தங்களது விருப்பு, வெறுப்புக்களுக்கு ஏற்றார் போல் ஒரு இணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த ரயில் சந்திப்பு மூலம் அறிமுகமாகும் நபர்கள் பயணத்தில் புரிந்துகொள்வதோடு, அதன் பின்பும் உறவை நீட்டித்து, சரியாக இருக்கும் பட்சத்தில் திருமண பந்தத்தில் இணைகின்றனர். இதுவரை 3 ஆண்டுகளில் விடப்பட்ட ரயிலில் 10 ஜோடிகள் திருமணம் செய்துகொண்டதாக இந்த காதல் ரயிலை ஏற்பாடு செய்த செங்க்டு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019