தமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் 30/08/2019

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 முதல் 30ம் தேதி வரை வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம்
Aug 30, 2019


தமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்குகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை திருத்தம் செய்வதற்கான வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை பல்வேறு வழிகளில் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதன்படி ஒன்று ஒன்பது ஐந்து பூஜ்ஜியம் 1950 என்ற தொலைப்பேசி எண் மூலமாகவும் வோடர்ஸ் ஹெல்ப் லைன் எனப்படும் மொபைல் ஆப் அல்லது NSVP எனும் தேசிய வாக்காளர் சேவை வலைத்தளம் மூலமாகவும் வாக்காளர்கள் தங்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் சரிபார்ப்புத் திட்டத்திற்காக மாவட்டந்தோறும் அமைக்கப்படும் சிறப்பு மையங்களிலும் திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம். 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019