ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் அறிமுகம் 30/08/2019

செப்டம்பர் 10ஆம் தேதி ஆப்பிளின் அடுத்த ஐபோன் அறிமுகம்
Aug 30, 2019


ஆப்பிளின் செப்டம்பர் மாத நிகழ்வில் ஐபோன் 11 மாடல் ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகமாக உள்ளது.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. கிருஸ்துமஸ் விடுமுறை கால வியாபாரத்தை கருத்தில் கொண்டு ஆப்பிள் இந்த அறிமுக நிகழ்ச்சியை நடத்தும்.

அந்தவகையில் நடப்பாண்டில் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெற உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் சிலிகான் வேலி வளாகத்தில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஐபோன்களில் பிராசசிங் பவர் மற்றும் கேமரா தரம் மேம்படுத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் வளர்ந்து வரும் 5ஜி தொலைதொடர்பு சேவைகளுக்கு ஏற்ப எந்த மாற்றமும் இந்த ஐபோன்களில் செய்யப்படவில்லை எனவும தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேவைகள், ஆப்பிளின் ஆக்சஸ்சரிஸ், ஐபேட் மற்றும் ஐபோன் விற்பனை அதிகரித்ததால் கடந்த காலாண்டின் இறுதியில் முன்பு இல்லாத வகையில் ஆப்பிளின் வருவாய் சிறப்பாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆப்பிள் ஐபோன்களின் விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் 12 சதவீதம் குறைந்துள்ளது.


Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019