இன்றே கடைசி நாள்-வருமான வரி 31/08/2019

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்
Aug 31, 2019


வருமான வரி கணக்கு தாக்கலுக்கான கெடு இன்றுடன் முடிவடைகிறது.

கடந்த 2018 - 19ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்துக்கான வருமான வரி படிவத்தை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாளாகும். அதற்குள் வருமான வரி படிவம் தாக்கல் செய்யாவிட்டால், தாமதக் கட்டணமாக ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த நேரிடும். வட்டி அபராதம் போன்றவற்றையும் சந்திக்க வேண்டியிருக்கும்

இதனிடையே வருமானவரி தாக்கல் செய்ய செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.

இதனை மறுத்துள்ள வருமானவரித்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியானவை முற்றிலும் தவறான தகவல் என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி வருமானவரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019