ஒலி மாசு ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிய ஒரு புதிய எந்திரம் 31/08/2019
ஒலி மாசு ஏற்படுத்தும் வாகனங்களை கண்டறிய சிறப்பு எந்திரம்
Aug 31, 2019
பிரான்ஸ் நாட்டில் ஒலி மாசு ஏற்படுத்தும் மோட்டார் பைக்குகளை சிறப்பு இயந்திரம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சத்தமாக ஒலி எழுப்பிக்கொண்டு செல்லும் பைக்குகளை ஒலி ராடார் என்று அழைக்கப்படும் இந்த இயந்திரம் மூலம் அடையாளம் கண்டு, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் உதவியால் அந்த பைக் இருக்கும் பகுதியை போலீசார் அறிந்துகொண்டு அபராதம் விதிக்க முடியும் என்று பாரிஸ் மேயர் Didier Gonzales தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த திட்டம் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இயந்திரத்தை பாரிசில் ஒலி மாசினை கண்காணித்து வரும் பிருட்பாரிப் நிறுவனத்தின் பொறியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
4 மைக்ரோ போன்கள் கொண்ட இந்த இயந்திரம், ஒலி எதிலிருந்து வருகிறது என்பதையும் கண்டறியக்கூடியது. இது தொடர்பான மசோதா பாரிஸ் மாநகராட்சி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்த இயந்திரத்தை இரண்டு ஆண்டுகளுக்கு சோதனை செய்து பின்னர், எந்த அளவிலான சத்தத்திற்கு எவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும் என்பது நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment