இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது 24/08/2019
தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு
Aug 24, 2019
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 29 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. சவரன் 29 ஆயிரம் ரூபாயையும் கடந்து வரலாறு காணாத அளவில் புதிய உச்சத்தை எட்டி விற்பனையானது.
தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை வரலாறு காணாத விலையேற்றத்துக்கு காரணமாக கூறப்பட்டன. இதனிடையே கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை சற்றே குறைவதும், பின்னர் மீண்டும் உயர்வதுமாக இருந்து வந்தது.
இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 28 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் ஆபரணத்தங்கம், இன்று 29 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ஒரே நாளில் 80 ரூபாய் அதிகரித்து மூவாயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாயை வெகு விரைவில் எட்டிவிடும் வேகத்தில் உயர்ந்து வருவதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 49 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் அதிகரித்து 49 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
Comments
Post a Comment