பொதுத்துறை நிறுவனங்களுக்கு 10 % போனஸ்..! 28/09/2019
பொதுத்துறை நிறுவனங்களுக்கு 10 சதவீத போனஸ்..! தமிழக அரசு அறிவிப்பு..
Sep 28, 2019
மாநில அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி போனஸ் பெற உச்சவரம்பு என்பது ரூ. 21 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் சி-டி ஊழியர்களுக்கு நடப்பு ஆண்டுக்கான 8.33 சதவிகித போனசும் மற்றும் ஊக்கத்தொகை 1.67 சதவீதம் என மொத்தம் 10 சதவீதம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து துறை, மின்வாரியம், தமிழ்நாடு தேயிலை கார்ப்பரேஷன், அரசு ரப்பர் கார்ப்பரேஷன் லிமிடெட், தமிழ்நாடு வனத்தோட்ட கார்ப்பரேஷன், நிர்வாகத்துறைகளில் பணிபுரிபவர்களுக்கு கடந்த ஆண்டை போன்று தனித்தனியே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Comments
Post a Comment