மின்னணு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.. 17/09/2019

மின்னணு, செல்போன் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில்புரிய அழைப்பு
Sep 17, 2019


மின்னணு பொருட்களின் உற்பத்தியை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவுடன் அதிக அளவு ஏற்றுமதி செய்யும்படி ஆப்பிள் போன்ற சர்வதேச நிறுவனங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இந்தியாவில் அதன் உற்பத்தியை பெருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆப்பிள், சாம்சங் போன்ற அசுரத்தனமான சர்வதேச மின்னணு நிறுவனங்களின் பொருட்கள் இந்திய சந்தையில் கிடைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.



இந்தியாவில் உற்பத்தியாளர்களுக்கு மனிதவளம், முதலீட்டாளர்களுக்கு இணக்கமான தொழில் கொள்கை, இந்தியாவில் உற்பத்தி செய்தால் சலுகைகள் போன்றவை கிடைக்கும் என்று 50 எலக்ட்ரானிக் மற்றும் போன் நிறுவனங்களின் தலைவர்களுடன் நடத்திய வட்டமேஜை கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே ஐபோன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய தொடங்கி விட்டது என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019