ஈகுவடார் நாட்டு மக்களின் சுயவிவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல்.... 17/09/2019

ஈகுவடார் நாட்டு மக்களின் சுயவிவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல்..
Sep 17, 2019


ஈகுவடார் நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் சுயவிவரங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈகுவடார் நாட்டில் வசிக்கும் குழந்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான மக்களின் சுயவிவரங்கள் வலைதளங்களில் கசிந்து வருவதாகவும், அதனை உடனடியாக சரிசெய்யும்படியும் அண்மையில் ZDNet என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம், அந்நாட்டின் கணினி சார்ந்த அவசர கால குழுவை தொடர்பு கொண்டு எச்சரித்தது.

அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஈகுவடார் அதிபர் லெனின் மொரெனோ பற்றிய தகவல்கள் உள்பட சுமார் ஒரு கோடியே 70 லட்சம் மக்களின் சுயவிவரங்கள் கசிந்திருந்தது கண்டறியப்பட்டது.

குறிப்பாக லண்டலிருந்து ஈகுவடார் நாட்டில் தஞ்சமடைய நினைத்து அந்நாட்டு அடையாள அட்டை எண் பெற்றிருந்த விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மற்றும் 70 லட்சம் குழந்தைகளின் முழுப்பெயர், பிறப்பிடம் மற்றும் பிறந்த தேதி, கல்வித் தகுதி, செல்போன் எண், தேசிய அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்கள் கசிந்திருந்தன.

Ecuadorean marketing and analytics என்ற நிறுவனம் பாதுகாப்பற்ற சர்வர் மூலம் தகவல்களை கசிய விட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் மக்களின் தகவல்கள் ஆன்லைனில் கசிந்துள்ளதை உறுதி செய்த அந்நாட்டு உள்துறை அமைச்சர், மரிய பவுலா, இது அரசு மற்றும் மாநிலங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் விவகாரம் என்பதால், அதற்கு காரணமானவர்களை கண்டறிய விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019